|
|
Categories |
" டாக்டர் ஷேக் அலாவுதீன் " சீனாவில் உள்ள சீஜாங் மருத்துவக் கல்லூரியில் படித்தவர். இவர் சீனாவின் பாரம்பரிய மருத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர். சீனாவில் உள்ள சீஜாங் மருத்துவக் கல்லூரியில் படித்த முதல் இந்திய டாக்டர் ஆவார். அதேபோல் சீன மருத்துவம் படித்து சவுதி அரேபியாவில் பணிபுரியும் முதல் இந்தியரும் இவரே.
சவுதி அரேபியாவில் உள்ள மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இவர் சவுதி அரேபியா அரசர், இளவரசர், இளவரசி, அரச குடும்பத்தினர், பஹ்ரைன் நாட்டு இளவரசி ஆகியோருக்கு சிகிச்சையளித்து பரிசுகளும் பாராட்டும் பெற்றவர்.
பலதரப்பட்ட நாட்டு மக்களுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டுகளை பெற்றுள்ள இவர் சீன மருத்துவருக்கான "பெஸ்ட் 2006" அவார்டு பெற்றுள்ளார்.
சீன மருத்துவத்தை பற்றி டாக்டர் ஷேக் அலாவுதீன் கூறுகையில், இந்த மருத்துவத்தின் மூலம் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நோயை நிரந்தரமாக குணமாக்க முடியும். சிறிய டான்சில் பிரச்சனை முதல் பெரிய பைபாஸ் வரை ஆபரேஷன் இல்லாமலும், அல்சர் முதல் கேன்சர் வரை துவக்கத்திலேயே நிரந்தரமாக குணமாக்க முடியும். காரணம் இந்த மருத்துவம் நோயை மட்டும் குணப்படுத்தாமல் நோய்க்கான காரணத்தையும் வேரிலிருந்து நிரந்தரமாக குணப்படுத்துகிறது.
உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தால் எந்த நோயும் வராது. எனவே உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த மருத்துவம் உதவுகிறது.
இதன் மூலம் பெயர் தெரிந்து தெரியாத பலதரப்பட்ட நோய்களையும் நிரந்தரமாக இல்லாமல் குணப்படுத்துகிறது. கையை தூக்க முடியாத புரோசன் ஷோல்டர் நோயை சில சிகிச்சைகளிலேயே நிரந்தரமாக தூக்க வைக்க முடியும். கோலஸ்ட்ரால் , ரத்தஅழுத்தம் , தலைவலி , முதுகுவலி , கேன்சர் , பாலியல்பிரச்சனைகள் , மூட்டுவலி , இதய நோய்கள் , கிட்னிபிரச்சனைகள் , உடல்பருமன் , பித்தப்பைகற்கள் , வாதநோய்கள் , குழந்தைப்பேறு இல்லாமை இன்னும் பலதரப்பட்ட நோய்களையும் இந்த மருத்துவ முறையின் மூலம் நிரந்தரமாக எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.
